வார்டு பகுதிகளில் மழைநீர் வடிகால் வசதி செய்து தரப்படும்:கூடலூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்


வார்டு பகுதிகளில் மழைநீர் வடிகால் வசதி செய்து தரப்படும்:கூடலூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 1 April 2023 12:15 AM IST (Updated: 1 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வார்டு பகுதியில் மழைநீர் வடிகால் வசதி செய்து தரப்படும் என்று கூடலூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேனி

கூடலூர் நகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமை தாங்கினார். ஆணையாளர் காஞ்சனா, பொறியாளர் வரலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் காஞ்சனா சிவ மூர்த்தி மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், கூடலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட முல்லைப்பெரியாறு பகுதியில் பொதுமக்கள் குளிப்பதற்கு துணி துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். அதிக அளவில் தண்ணீர் வரும்போது சிலர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இறந்து விடுகின்றனர். இதனை தடுக்க நகராட்சி மூலம் லோயர்கேம்ப் வைரவனார் அணை மற்றும் கூடலூர் காஞ்சிமாத்துறை பாலம் ஆகிய 2 இடங்களில் இரும்பினால் ஆன எச்சரிக்கை பலகை அமைப்பது, நகராட்சி வார்டு பகுதிகளான 1,2,5,8 ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் வசதி, சிறுபாலம் கட்டுதல் மற்றும் பேவர்பிளாக் சாலை அமைக்கப்படும்.

கூடலூர் நகராட்சியில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கு தேவையான ஒருங்கிணைந்த சமையல் கூடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதில் ரூ.27 லட்சத்தில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்குதல், கூடலூர் நகராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடத்தை (இன்று) ஏப்ரல் 1-ந் தேதி முதல் பொதுமக்களின் சுப நிகழ்ச்சி மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு நாள் வாடகை அடிப்படையில் பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்குவது என்பன உள்பட 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மேலாளர் ஜெயந்தி, சுகாதார அலுவலர் விவேக், வருவாய் அலுவலர் அய்யப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story