மழைநீர் வடிகால் பணிகள்: நாளை ஆய்வு மேற்கொள்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் நடக்கும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு செய்கிறார்.
சென்னை,
தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அக்டோபர் மாதம் பருவமழை தொடங்கும் என்பதால் அதற்கு முன்னேற்பாடாக மழைநீர் தேங்காமல் இருக்க பல பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் சென்னையில் நடக்கும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு செய்கிறார். அதன்படி சென்னையில் பாடி, திரு,வி,.க.நகர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளின் நிலை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.
மேலும் பெரம்பூர் தணிகாச்சலம் கால்வாயை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
Related Tags :
Next Story