நந்திவரத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்


நந்திவரத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்
x

நந்திவரத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு செய்து வரும் மழையின் காரணமாக நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட நந்திவரம் ஜெயலட்சுமி நகர், அமுதம் காலனி போன்ற பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் ஒரு சில வீடுகளில் மழை நீர் புகுந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் வெளியே போக முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர். மழைநீர் தேங்கிய பகுதியில் நகராட்சி ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே போல பெருமாட்டுநல்லூர் பஸ் நிறுத்தம் எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில் மழை நீர் 2 அடிக்கு மேல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

1 More update

Next Story