மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கடலூர்
கடலூர் நேரு யுவகேந்திரா சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி மஞ்சக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகில் நடந்தது. இதற்கு மாவட்ட இளையோர் அலுவலர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மேற்பார்வையாளர் கதிரவன் முன்னிலை வகித்தார். நேரு யுவகேந்திரா ஓய்வு பெற்ற நிர்வாக உதவியாளர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சம்பந்தமூர்த்தி தலைமையிலான கலைகுழுவினர் கலைநிகழ்ச்சி நடத்தி மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து இந்த குழுவினர் கடலூர் சில்வர் பீச் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டுபிரசுரம் வழங்கினர்.
Related Tags :
Next Story