ஜெர்மன் தொழில் நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டி
ரேஸ்கோர்சில் ஜெர்மன் தொழில்நுட்ப உதவியுடன் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று ஸ்மார்ட் சிட்டி அதிகாரி கூறினார்.
ரேஸ்கோர்ஸ்
ரேஸ்கோர்சில் ஜெர்மன் தொழில்நுட்ப உதவியுடன் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று ஸ்மார்ட் சிட்டி அதிகாரி கூறினார்.
புனரமைப்பு
கோவை மாநகரின் மத்திய பகுதியில் ரேஸ்கோர்சில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். அந்த நடைபாதையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் நடைபயிற்சி செய்பவர்கள் சிரமத்துக்கு ஆளானார்கள்.எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் நடை பாதையை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில், ஜெர்மன் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் நவீனமழைநீர் கட்டமைப்பு (இன்பில்ட் ரேஷன் கேலரி) ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மழைநீர் சேகரிப்பு தொட்டி
அதில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பள்ளம் தோண்டி அதன் மேல் துவாரம் உள்ள பிளாஸ்டிக் கூண்டு வைக்கப்பட்டது. அதன் மீது ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு, மண் கொண்டு மூடப்பட் டது.
இந்த மழைநீர் கட்டமைப்பில் சேரும் மழைநீர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்து நிர்மலா கல்லூரி செல்லும் சாலையோர பூங்காவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு மழைநீரை சேமிக்க 8.5 மீட்டர் அகலம், 7.5 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இது 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. இந்த தொட்டியில் 6 அடி உயரத்திற்கு துவாரங்கள் உள்ள பிளாஸ்டிக் கூடுகளை அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. பின்னர் இந்த தொட்டி ஜல்லிக்கற்கள் கொண்டு மூடப்பட்டு பூங்கா அமைக்கப்படும்.
நிலத்தடி நீர்மட்டம்
இது குறித்து ஸ்மார்ட் சிட்டி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ரேஸ்கோர்ஸ் பகுதியில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதில் சேகர மாகும் மழைநீர் குழாய் மூலம் தொட்டிகு கொண்டு செல்லப்ப டும்.
இதன் மூலம் ரேஸ்கோர்ஸ் நடைபயிற்சி பாதையில் மழை காலங்களில் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்படும். மேலும் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.