அத்தியூரில் வீட்டுக்குள் புகுந்த மழைநீர்


அத்தியூரில் வீட்டுக்குள் புகுந்த மழைநீர்
x

அத்தியூரில் வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அகரம்சீகூர், லெப்பைக்குடிக்காடு ஆகிய பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதில் குன்னம் தாலுகா, அத்தியூர் கிராமத்தில் நேற்று முன்தினம் பகல் நேரத்தில் பலத்த மழை பெய்த போது சிவன் கோவில் தெருவில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர், கழிவுநீருடன் புகுந்தது. இதனால் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் வீட்டினுள் புகுந்த மழைநீரை வாரி இரைத்து வெளியே ஊற்றினர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் சாலை வசதி, கழிவு நீர் வடிகால் வசதி சரியாக இல்லை. இதனால் பலத்த மழைக்கு சாலையில் ஓடிய மழைநீர் கழிவுநீருடன் சேர்ந்து வீட்டுக்குள் புகுந்தது. வீடுகளுக்கு மழைநீர் புகாமல் இருக்கவும், எங்கள் தெருவில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


Next Story