வயல்களில் மழைநீர் தேங்கியது


வயல்களில் மழைநீர் தேங்கியது
x

எடப்பாடி பகுதியில் கனமழை பெய்ததால் வயல்களில் மழைநீர் தேங்கியது. அதனை ெ வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி உள்ளனர்.

சேலம்

எடப்பாடி:-

எடப்பாடி பகுதியில் கனமழை பெய்ததால் வயல்களில் மழைநீர் தேங்கியது. அதனை ெ வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி உள்ளனர்.

கனமழை

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வறண்ட வானிலையே நிலவி வந்தது. இந்தநிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டியது. குறிப்பாக எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, கூடகல், குப்பனூர், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த சோளம், வாழை, பருத்தி, நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகின. பூலாம்பட்டி பில்லுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவு செய்யப்பட்டு இருந்த வயல்களில் தண்ணீர் அதிக அளவு தேங்கியது.

வயல்களில் தேங்கிய தண்ணீர்

நெற்பயிர்கள் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த சோள பயிர்கள் கனமழைக்கு தாக்கு பிடிக்க இயலாமல் சாய்ந்தன.

பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் குறித்து அந்த பகுதியில் வருவாய் துறையினர் மற்றும் வேளாண் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். கனமழையால் அப்பகுதியில் உள்ளூர் நீர்நிலைகள் மற்றும் கசிவு நீர் குட்டைகளில் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.


Next Story