குளம்போல் தேங்கிய மழைநீர்


குளம்போல் தேங்கிய மழைநீர்
x

குளம்போல் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் ஒன்றியம் வேலூர் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் அங்குள்ள ரேஷன் கடை எதிரே மழைநீர் வெளியேறாமல் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story