பள்ளி நுழைவு வாயில் முன்பு குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்; சீரமைக்க கோரிக்கை


பள்ளி நுழைவு வாயில் முன்பு குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்; சீரமைக்க கோரிக்கை
x

பள்ளி நுழைவு வாயில் முன்பு குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு - சோளிங்கர் சாலையில் பேரூராட்சி அலுவலகம் அருகே அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பள்ளிப்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று பள்ளிப்பட்டு பகுதியில் காலை மிதமான மழை பெய்தது. இதனால் பள்ளியின் நுழைவு வாயில் முன்பு மழைநீர் குளம் போல் தேங்கியது. மாணவர்கள் பள்ளிக்குள் செல்ல வேண்டும் என்றால் தேங்கிய மழைநீரை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story