சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்
ஆலங்குளத்தில் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலங்குளம்,
ஆலங்குளத்தில் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலையில் மழைநீர்
ஆலங்குளம் டி.என்.சி. முக்கு ரோட்டில் இருந்து அரசு சிமெண்டு ஆலை, அம்பேத்கர் நகர், கொங்கன்குளம், மேல பழையாபுரம், திருவேங்கிடபுரம், நதிக்குடி, ஆத்தூர், சுப்பிரமணியபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் வடிய வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
வாகனங்களில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
அகற்ற நடவடிக்கை
இந்த சாலை வழியாக தினமும் எண்ணற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள், பட்டாசு ஆலைக்கு செல்பவர்கள் செல்கின்றனர்.
இவ்வாறு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் தினமும் சிரமத்துடன் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. சிறிய மழை பெய்தால் கூட இ்ந்த சாலையில் தண்ணீர் வடிய வழியின்றி தேங்கி விடுகிறது. எனவே ஆலங்குளம் டி.என்.சி. முக்கு ரோட்டில் இருந்து சிமெண்டு ஆலைக்கு செல்லும் சாலையை உடனே சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.