குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்; கிராம மக்கள் மறியல்


குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்; கிராம மக்கள் மறியல்
x

குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

வையம்பட்டி:

கிராம மக்கள் மறியல்

வையம்பட்டியை அடுத்த தவளைவீரன்பட்டி குறிஞ்சி நகரில் 55-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் தண்ணீர் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் மிகுந்த சிரமத்திற்குள்ளான கிராம மக்கள் நேற்று இரவு மணப்பாறை - தரகம்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த வருவாய் துறையினர், ஊராட்சி நிர்வாகம் மற்றும் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வையம்பட்டி போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

முசிறியில் பலத்த மழை

இதேபோல் முசிறி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென இடியுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரமாக பெய்த இந்த மழையால் சுற்றுப்புற மானாவாரி பயிர்களான கம்பு, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்யும் தொட்டியம், தா.பேட்டை, குணசீலம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story