ராஜகுமார் எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழா


ராஜகுமார் எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழா
x

மயிலாடுதுறையில் ராஜகுமார் எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழா

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ., பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடந்த பிறந்த நாள் விழாவில் சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சத்தியசீலன், ஜெகவீரபாண்டியன், குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், முன்னாள் மாவட்டத்தலைவர் பண்ணை சொக்கலிங்கம், சீர்காழி முன்னாள் நகர சபை தலைவர் கனிவண்ணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் இளையபெருமாள், இமயநாதன், முருகமணி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக ராஜகுமார் எம்.எல்.ஏ., கேக் வெட்டி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

ஒன்றியக்குழு உறுப்பினர் வடவீரபாண்டியன் வரவேற்றார். விழாவில் காங்கிரஸ் நகரத் தலைவர் ராமானுஜம், தி.மு.க. செயலாளர்கள் வைத்தி, பிரபாகரன், மணல்மேடு பேரூர் கண்மணி அறிவழகன், கொள்ளிடம் ஒன்றியக்குழு துணை தலைவர் பானுசேகர், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நவாஸ், வக்காரமாரி அன்பழகன், கடவாசல் பாலு, ரியாஸ், சூர்யா, வி.எஸ்.ஆர்.ராஜேந்திரன், மன்னம்பந்தல் ராஜா மற்றும் தி.மு.க, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் நகர வர்த்தக சங்க பிரமுகர்கள் கலந்து கொண்டு எம்.எல்.ஏ.வுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story