மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு,நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை ,
மாநிலங்களவை நியமன உறுப்பினராக பிரபல இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் கேரளாவை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை பி.டி. உஷாவும் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இருவரும் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக ஆகின்றனர்.
இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு,நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது ;
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். என குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story