யோகி காலில் ரஜினிகாந்த் விழுந்தது ஒரு கசப்பான சம்பவம்; விஜய் வசந்த் எம்.பி. பேட்டி
நடிகர் ரஜினி காந்த் உத்தரப் பிரதேச மாநில முதல்வரின் காலில் விழுந்ததுள்ளது ஒரு கசப்பான சம்பவம் என்று கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் கூறினார்.
குலசேகரம்,
குமரி மாவட்டம் பொன்மனை அருகே ஈஞ்சக்கோடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி நிகழ்ச்சிக்கு வந்த விஜய் வசந்த் எம்பி மேலும் கூறியதாவது.
நடிகர் ரஜினிகாந்த் உத்தரப்பிரதேச மாநில முதல்வரின் காலில் விழுந்து வணங்கிய செயல் தற்பொழுது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. நான் சன்னியாசிகள், யோகிகள் என்னை விட வயது குறைவாக இருந்தாலும் அவர்களின் காலில் விழுந்து வணங்குவது எனது வழக்கம். அந்த வகையில் தான் உத்தரபிரதேச முதல்வர் யாோகி ஆதித்ய நாத்தின் காலில் விழுந்து வணங்கினேன் என்று ரஜினி காந்த் கூறுகிறார்.
திரையில் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலிக்கும் இவர் இப்படி காலில் விழுந்திருப்பது என்பது ஒரு கசப்பான சம்பவம். அரசியல் நோக்கத்துடன் இப்படி செயல்படுகிறார் என்று எண்ண வேண்டியுள்ளது. பா.ஜனதா கவர்னர்களை சந்தித்திருப்பதும் துணை ம இவருடைய அரசியல் நோக்கத்தை காட்டுகிறது. ஏற்கனவே இவர் பா. ஜன தாவுக்கு ஆதரவாக செயல்படும் முடிவில் இருந்தார். தற்பொழுது இவர் பா.ஜனதாவுக்கு ஆதரவாகவே செயல்படுவதாகவே தோன்றுகிறது. சமீபத்தில் வெளிவந்த
சி ஏ ஜி அறிக்கையில் மத்திய அரசின் பல்வேறு ஊழல்கள் வெளியாகியுள்ளன. எதற்கும் பதில் கூறாத பிரதமர் இதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும். இந்தியாவை தனி ஒருவராக உயர்த்தினேன் என்று மார்தட்டும் பிரதமர் இந்த ஊழல் விஷயத்திற்கு கண்டிப்பாக பதில் கூற வேண்டும். தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறதோ அதற்கு எதிராக, தமிழக கவர்னர் செயல்படுகிறார். முன்னாள் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையில் எத்தனை சிறப்பாக பணியாற்றினார் என்பது நமக்கு தெரியும் தமிழ்நாடு டிஎன்பிசி தலைவராக அவரை நியமிக்கும் விஷயத்தில் ஆளுநர் இடையூறு செய்யாமல் செயல்பட வேண்டும்.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை குமரியில் தொடங்கிய பாதயாத்திரையை என்பது பாதி பாதி யாத்திரை தான். மக்கள் ஒற்றுமைக்காக அவர் இந்த பாதயாத்திரை நடத்தவில்லை. ராகுல் காந்தி தான் மக்கள் ஒற்றுமைக்காக எழுச்சிமிக்க பாதையாத்திரையை நடத்தினர். இந்த பாதயாத்திரையின் போது அவர், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குமரி மாவட்டத்திற்கு பல ஆயிரம் கோடி திட்டங்களை செய்ததாக பொய் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கான திட்டங்களை வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என்று நான் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தேன், அதற்கு அவர் இன்னும் பதில் கூறவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகளில் மத்திய அரசு பல்வேறு முட்டுக்கட்டைகள் போட்ட பிறகும்
போராடித்தான் பல்வேறு நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகிறோம். நான்கு வழி சாலை திட்டம் உட்பட ரயில்வே மேம்பாட்டுத் திட்டங்களுக்காகவும் நாம் தீவிரமாக செயலாற்றி வருகிறோம் என்றார்.