ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ராஜீவ்காந்தி நினைவு தினம்
திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. காமராஜர் சிலை முன்பு நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மச்சக்காளை முன்னிலை வகித்தார். அதையடுத்து காமராஜர் சிலை முன்பு வைக்கப்பட்ட ராஜீவ்காந்தி உருவ படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதையடுத்து தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அம்சவள்ளி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது அலியார், கவுன்சிலர் பாரதி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் காளிராஜன், துணை தலைவர் அப்துல் ஜப்பார், மகளிர் காங்கிரஸ் நிர்வாகி ரோஜாபேகம், மண்டல தலைவர்கள் பரமசிவம், உதயக்குமார், மாவட்ட நிர்வாகிகள் ஹபீப், ஷாஜகான், பாலகணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வடமதுரை
வடமதுரை வட்டார காங்கிரஸ் கட்சியினர் சார்பில் அய்யலூரில் ராஜீவ்காந்தியின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வடமதுரை வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜரத்தினம், அய்யலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் முத்து, நகர பொறுப்பாளர் அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் காந்தி, வார்டு கவுன்சிலர் ஜெயலட்சுமி மற்றும் கட்சி நிர்வாகிகள் போஸ், கணேஷ் கண்ணா, சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வேடசந்தூர்
வேடசந்தூர் வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி அவர் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு தலைவர் சதீஷ் என்ற சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சி.சாமிநாதன், ரங்கமலை ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் கட்சியினர் பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் மூர்த்தி, வட்டார பொதுச்செயலாளர் பகவான், மாவட்ட பிரதிநிதி ராஜன், மாவட்ட முன்னாள் பொதுச்செயலாளர் இரா.பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
உறுதிமொழி ஏற்பு
நிலக்கோட்டையில் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கு நிலக்கோட்டை வட்டார தலைவர் கோகுல்நாத் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சி.நடராஜன், நகர தலைவர் வீ.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கட்சியினர் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இதில் சிவாஜி மன்ற செயலாளர் வீராச்சாமி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பாண்டியன், பவுன், கணேசன், சந்திரன், மல்லப்பன், குகன், நவநீதன், தொகுதி இளைஞரணி தலைவர் கவுரிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.