நாமக்கல் மாவட்டத்தில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு


நாமக்கல் மாவட்டத்தில்  ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
x

நாமக்கல் மாவட்டத்தில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல், திருச்செங்கோடு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31-வது நினைவுநாள் நேற்று நாமக்கல் நகர காங்கிரஸ் சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவபடத்திற்கு மலர்அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் நகர காங்கிரஸ் தலைவர் மோகன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக், மாநில துணைத்தலைவர் டாக்டர் செழியன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீரப்பன், கொல்லிமலை வட்டார காங்கிரஸ் தலைவர் குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் தீவிரவாத ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமை தாங்கினார். இதையடுத்து திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட துணை தலைவர் காசி விசுவநாதன், மாவட்ட பொது செயலாளர்கள் நந்தகோபால், கோபாலகிருஷ்ணன், கந்தசாமி, நகர பொருளாளர் சிங்காரம், தியாகராஜன், பாலதண்டாயுதம், ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குமாரபாளையம்

குமாரபாளையம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. நகர காங்கிரஸ் தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கி காங்கிரஸ் அலுவலகம் முன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில் நகர காங்கிரஸ் பொருளாளர் சிவராஜ், மாவட்ட துணைத்தலைவர் தங்கராஜ், நகர துணைத்தலைவர் சிவகுமார், நகர செயலாளர் சுப்பிரமணியம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், முன்னாள் நகர தலைவர்கள் மோகன் வெங்கட்ராமன், சக்திவேல், மனோகரன், முன்னாள் நகர துணைத்தலைவர் நக்கீரன், மாவட்ட செயலாளர் கோகுல்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் 15-வது வார்டு தலைவர் செந்தில் நன்றி கூறினார்.


Next Story