பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பாபநாசம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தஞ்சாவூர்
பாபநாசம்:-
பாபநாசம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.இதில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் துணைத்தலைவர் பூபதி ராஜா மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story