வாக்காளர் விழிப்புணர்வு பேரணி


வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
x

ராமேசுவரம் முதல் மண்டபம் வரை நடந்த வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை இந்திய தேர்தல் ஆணையர் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் முதல் மண்டபம் வரை நடந்த வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை இந்திய தேர்தல் ஆணையர் தொடங்கி வைத்தார்.

பேரணி

ராமேசுவரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து மண்டபம் கடற்கரை பூங்கா வரை வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. இந்த பேரணியை இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே தொடங்கி வைத்தார்.

கலாம் நினைவிடத்தில் இருந்து தொடங்கிய இருசக்கர வாகன பேரணி தங்கச்சிமடம், பாம்பன் ரோடு பாலம் வழியாக மண்டபம் கடற்கரை பூங்கா வரை சென்று அடைந்தது.

வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான வருவாய் துறை பணியாளர்கள் பங்கேற்று இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதாசாகு, மாவட்ட கலெக்டர் சங்கர்லால்குமாவத், வருவாய் கோட்டாட்சியர் சேக்மன்சூர், தாசில்தார்கள் மார்டின், அப்துல்ஜபார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆய்வு

தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே நடராஜபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையம் ஒன்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக இந்திய தேர்தல் ஆணையர் ராமேசுவரம் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்ததுடன் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டிற்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.


Next Story