ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா: பால் குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.


ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா: பால் குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
x

ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி பால் குடம், முளைப்பாரி ஊர்வலம்

நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரத்தில் உள்ள எல்லை மாரியம்மன் மற்றும் பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் 9.15 மணிவரை நடைபெறுகிறது. முன்னதாக விழா நேற்று முன்தினம் கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். பிறகு நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் இருந்து ஏராமான பெண்கள் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். மாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய ஊர்வலமானது பழைய பஸ் நிலையம், கடைவீதி, புதுப்பாளையம் ரோடு வழியாக எல்லை மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story