போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி


போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி
x

போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

ராமநாதபுரம்


தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை நாட்டு நலப்பணி திட்டத்தின்கீழ் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார். செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி அலுவலர் முகமது தாசின் வரவேற்றார். ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மருதுபாண்டியன், கேணிக்கரை இன்ஸ் பெக்டர் ஆடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்து போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் ராமநாதபுரம் நகரில் உள்ள ராஜா மேல் நிலைப்பள்ளி, செய்யது அம்மாள் மேல் நிலைப்பள்ளி, டி.டி. விநாயகர் மேல்நிலைப்பள்ளி, புனித அந்திரேயா பெண்கள் மேல் நிலைப்பள்ளி, சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி, இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர். அரண்மனை முன்பு தொடங்கிய இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று சுவார்ட்ஸ் மேல் நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. ராஜா மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.


Next Story