தர்மபுரியில் வலிமை இந்தியா விழிப்புணர்வு மாரத்தான்


தர்மபுரியில்   வலிமை இந்தியா விழிப்புணர்வு மாரத்தான்
x
தினத்தந்தி 3 Oct 2022 12:15 AM IST (Updated: 3 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் வலிமை இந்தியா விழிப்புணர்வு மாரத்தான்

தர்மபுரி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தர்மபுரி பிரிவு சார்பில் வலிமையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவோம் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாரத்தான் தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி நடந்தது. இதனை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் தர்மபுரி மாவட்ட மகளிர் விளையாட்டு விடுதி மாணவிகள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகள் கலந்து கொண்டு தர்மபுரி நகரின் முக்கிய சாலைகள் வழியாக 3 கி.மீ. தூரத்திற்கு ஓடினார்கள். அப்போது உடற்பயிற்சி செய்வதன் அவசியம் குறித்தும், சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பத ன் முக்கியத்துவம் குறித்தும் இந்த ஓட்டத்தில் பங்கேற்ற வீராங்கனைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலக பணியாளர்கள் செய்து இருந்தனர்.

---


Next Story