நல்லம்பள்ளி ஊராட்சியில் தூய்மை விழிப்புணர்வு ஊர்வலம்
தர்மபுரி
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி ஊராட்சியில் உலக கழிவறை தினத்தையொட்டி தூய்மை விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தொடங்கிய ஊர்வலத்தை நல்லம்பள்ளி ஊராட்சி தலைவர் புவனேஸ்வரிமூர்த்தி தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் ஊராட்சியின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தின்போது பாதுகாப்பான கழிப்பறை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த துண்டு பிரசுரங்களை தூய்மை பணியாளர்கள் பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கிராம வளர்ச்சிக்குழு தலைவர் மூர்த்தி, துணை தலைவர் சித்துராஜ், ஊராட்சி செயலாளர் பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story