பொ.மல்லாபுரத்தில், அரசு ஆண்கள் பள்ளி சார்பில்டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


பொ.மல்லாபுரத்தில், அரசு ஆண்கள் பள்ளி சார்பில்டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 28 Dec 2022 6:45 PM GMT (Updated: 28 Dec 2022 6:47 PM GMT)
தர்மபுரி

பாப்பிரெட்டிபட்டி:

தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் பொ.மல்லாபுரத்தில் உள்ள பழைய ஒட்டுபட்டி கிராமத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சக்திவேல் முகாமை தொடங்கி வைத்து பேசினார். முகாமில் மாணவர்கள் சாலையை சீரமைத்தல், கோவில் தூய்மை, மழைநீர் சேகரிப்பு, நிலவேம்பு கசாயம் வழங்குதல், மயானத்திற்கு பாதை அமைத்தல், உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும் டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பொம்மிடி பஸ் நிலையம், ெரயில்வே நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று பள்ளியை வந்தடைந்தது, ஊர்வலத்தின் போது மாணவர்கள் பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தமிழ் தென்றல், உதவி திட்ட அலுவலர் சேகர் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story