புத்தக கண்காட்சி குறித்த விழிப்புணர்வு பேரணி


புத்தக கண்காட்சி குறித்த விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 10 Feb 2023 12:15 AM IST (Updated: 10 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புத்தக கண்காட்சி குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ராமநாதபுரம்

தொண்டி,

தொண்டி பேரூராட்சி எம்.ஆர்.பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சார்பில் ராமநாதபுரத்தில் நடைபெறும் சங்கமம் புத்தக கண்காட்சி குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கம் தலைமை தாங்கினார். பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஜெனிபர் நிஷா அயூப் கான் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் புத்தக கண்காட்சி மற்றும் புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து கோஷங்களை எழுப்பியவாறு கையில் விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர். முக்கிய வீதிகளில் வலம் வந்த பேரணி பள்ளிவாசல் முன்பு நிறைவடைந்தது. பின்னர் மாணவ, மாணவிகளின் பெருந்திறல் வாசிப்பு நடைபெற்றது. இதில் பி.வி.பட்டினம் முகமது அலி, பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ஜீவானந்தம், தர்ஷினி, இடைநிலை ஆசிரியர்கள் ஜெஸிலி, ஜெரோம் டெல்லர்ஸ் பிரிட்டோ மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story