நாமக்கல்லில் மே தின ஊர்வலம்-ராஜேஸ்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட லாரி பாடி கட்டும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட தொ.மு.ச. சார்பில் மே தின ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு லாரி பாடி கட்டும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க தலைவர் கோபி தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயந்தன் வரவேற்று பேசினார். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், தமிழ்நாடு அரசு கட்டுமான வாரிய தொ.மு.ச. உறுப்பினர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல்லில் பரமத்தி சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. தொடங்கி வைத்து, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் இனிப்பு வழங்கினார். இந்த ஊர்வலம் பரமத்தி சாலை, மணிக்கூண்டு, திருச்சி சாலை வழியாக நகராட்சி திருமண மண்டபத்தில் முடிவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட தொ.மு.ச. செயலாளர் சுந்தரமூர்த்தி, நாமக்கல் நகர தி.மு.க. நிர்வாகிகள் பூபதி, சிவக்குமார், ராணா ஆனந்த், நகராட்சி தலைவர் கலாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.