பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி பேரணி


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி பேரணி
x

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி பேரணி நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகரில் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் பேரணி நடைபெற்றது. தேர்தல் வாக்குறுதி படி பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் எம்.ஜி.ஆர். சிலையில் இருந்த பேரணி நடைபெற்றது. இந்நகர் தேசபந்து திடலில் பேரணி நிறைவடைந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற பேரணியினை மாநில செயலாளர் புகழேந்தி தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட நீதி காப்பாளர் விக்னேஷ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பல்வேறு சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். மாவட்ட செயலாளர் கண்ணன் நிறைவுரையாற்றினார். பாலசுப்ரமணியம் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story