டெல்லியில், தேசிய கல்வி கொள்கையை கண்டித்து நாளை பேரணி: தி.மு.க. மாணவரணி தகவல்


டெல்லியில், தேசிய கல்வி கொள்கையை கண்டித்து நாளை பேரணி: தி.மு.க. மாணவரணி தகவல்
x

பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ள 'தேசிய கல்விக் கொள்கை - 2020' மாணவர்களின் கல்வி உரிமைக்கு எதிரானது.

சென்னை,

தி.மு.க. மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ள 'தேசிய கல்விக் கொள்கை - 2020' மாணவர்களின் கல்வி உரிமைக்கு எதிரானது. இதனை கண்டித்து நாளை (வெள்ளிக்கிழமை) டெல்லியில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் நாடாளுமன்றம் நோக்கிய மாபெரும் மாணவர் பேரணி நடைபெறுகிறது.

இந்த பேரணிக்கு தி.மு.க. மாணவர் அணியினர் திரண்டு வர வேண்டும் என்று அன்போடு அழைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்த கவர்னர் ஆர்.என்.ரவி செல்லக்கூடாது. மீறி சென்றால் அவரை கண்டித்து இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மற்றொரு அறிக்கையில் எழிலரசன் கூறியுள்ளார்.


Next Story