அன்னவாசல் பகுதிகளில் ரமலான் நோன்பு தொடங்கியது


அன்னவாசல் பகுதிகளில் ரமலான் நோன்பு தொடங்கியது
x

அன்னவாசல் பகுதிகளில் ரமலான் நோன்பு தொடங்கியது. பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது.

புதுக்கோட்டை

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ரமலான் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும். இந்த ரமலான் மாதத்தில் 30 நாட்களும் நோன்பு இருந்து இறைவனை தொழுகை செய்வது இஸ்லாமியர்களின் வழக்கம். ஷபான் மாதத்தின் 30-ம் நாளில் வானில் தோன்றும் பிறையை அடிப்படையாக கொண்டு ரமலான் நோன்பு தொடங்கப்படும். ரமலான் நோன்பின்போது சஹர் எனப்படும் உணவை அதிகாலை 4 மணிக்கே சாப்பிட்டு, சூரியன் உதயத்துக்குப்பின் நோன்பு இருப்பார்கள். நாள் முழுவதும் தண்ணீர், உணவு அருந்தாமலும், சூரியன் மறைந்தபிறகு நோன்பை முடித்துக் கொள்வார்கள். இந்தநிலையில் ரமலான் நோன்பு தொடங்கியதையடுத்து அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, வயலோகம், பரம்பூர், பெருமநாடு, காலாடிப்பட்டி, சத்திரம், புல்வயல், குடுமியான்மலை உள்ளிட்ட பகுதிகளில் நோன்பு நடைபெறும் 30 நாட்களும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையும், மாலை நேரங்களில் நோன்பு கஞ்சி வழங்குவது வழக்கம். அதன்படி சிறப்பு தொழுகை நடைபெற்றது. 30-ம் நாளின் முடிவில் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள்.

1 More update

Next Story