ரம்ஜான் சிறப்பு தொழுகை


ரம்ஜான் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்ட ஜாக் அமைப்பு சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

கோயம்புத்தூர்


கோவை

ரம்ஜான் மாதம், முஸ்லிம்களின் புனித மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

ரம்ஜான் பண்டிகையையொட்டி கோவை மாவட்ட ஜாக் அமைப்பு சார்பில் கோவை குனியமுத் தூர் ஆயிஷா மஹால் மைதானத்தில் ரமலான் சிறப்பு தொழுகை நேற்று நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.

புத்தாடைகள் அணிந்து தொழுகையில் பங்கேற்ற முஸ்லிம்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.


Next Story