ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயற்சி - போலீசார் பொய் வழக்கு போடுவதாக குற்றச்சாட்டு


ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 3 பேர்  தீக்குளிக்க முயற்சி - போலீசார் பொய் வழக்கு போடுவதாக குற்றச்சாட்டு
x

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயற்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் சிங்கநேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பூமிராஜன்(வயது 50). சுப்ரமணி மகன் பிரபாகரன்(வயது 35), முருகேசன் மகன் ஹரிஹரன் (வயது36) ஆகிய மூவரும் மணல் திருடியதாக தேவிபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தேவிபட்டிணம் போலீசார் மணல் திருடியதாக பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி இன்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்த 3 பேரும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து கேணிக்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story