ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு


ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு
x

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பழைய பிரசவ அறுவை சிகிச்சை அரங்கு உள்ளது. மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தனியாக கட்டிடம் கட்டப்பட்டதை தொடர்ந்து இந்த அறுவை சிகிச்சை அரங்கு அங்கு மாற்றப்பட்டது.

இந்த பழைய கட்டிடம் சிறிய அளவிலான அலுவல் ரீதியான கூட்டங்கள் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. கூட்டம் எதுவும் நடைபெறாத போது இந்த அறை அடைத்து வைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று பிற்பகலில் இந்த பழைய பிரசவ அறுவை சிகிச்சை அரங்கில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தீவிபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து தீயை அணைத்தனர்.

மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story