2 வருடங்களுக்கு பின்னர் தொடங்கிய ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரெயில் சேவை...!


x

ராமேஸ்வரம்-மதுரை இடையே பயணிகள் ரெயில் சேவை 2 வருடங்களுக்கு பின்னர் இன்று தொடங்கியது.

ராமேஸ்வரம்,

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு ரெயில்கள் வழக்கம் போல் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் ராமேஸ்வரம்-மதுரை இடையே கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரெயில் இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

முதல் நாளான இன்று ராமேஸ்வரம் ரெயில் நிலையத்திலிருந்து இன்று காலை 11 மணிக்கு புறப்பட்டு சென்ற மதுரை பயணிகள் ரெயில் பாம்பன் ரெயில் பாலத்தை கடந்து சென்றது. இதேபோல் மதுரையில் இருந்தும் ராமேஸ்வரத்திற்கு பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story