ஒப்பிலியப்பன் கோவிலில் ராமநவமி உற்சவம்


ஒப்பிலியப்பன் கோவிலில் ராமநவமி உற்சவம்
x
தினத்தந்தி 9 April 2023 12:15 AM IST (Updated: 9 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் ராமநவமி உற்சவம் நடந்தது.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

திருநாகேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ஒப்பிலியப்பன் கோவில் வெங்கடாசலபதி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ராம நவமி உற்சவம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை நான்மறை மற்றும் தமிழ் மறை முழங்க பஞ்சரத்ன பாடல்கள் பாடினர். மதியம் ராமர் மற்றும் அனுமன் கனகாபிஷேகம் நடைபெற்றது. மாலை ராமர் பட்டாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள், தாயார் தர்பார் மண்டபம் எழுந்தருளி அருள் பாலித்தனர். பின்னர் அனுமன் மகுடாபிஷேகம் நடைபெற்றது. இரவு பரதநாட்டியம் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஆலய உதவி ஆணையர் சு. சாந்தா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story