ராணிப்பேட்டை மாவட்டத்தில்பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பலத்த மழை
ராணிப்பேட்டை, சிப்காட், வாலாஜா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. வாலாஜாவில் பெய்த பலத்த மழையால் தெருக்களில் மழை வெள்ளம் கரை புரண்டோடியது. ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் தேங்கியுள்ளது.
இதனால் நிலத்தடி நீர் பெருகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெப்பம் தணிந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நெமிலி, காவேரிப்பாக்கம்
நெமிலி, சயனபுரம், பள்ளூர், சிறுணமல்லி, சேந்தமங்கலம், ரெட்டிவலம், பனப்பாக்கம், கீழ்வீதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல காவேரிப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளான ஒச்சேரி, பெரும்புலிப்பாக்கம், திருப்பாற்கடல், அத்திப்பட்டு, கரிவேடு ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.
மழை அளவு
நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
வாலாஜா-141. ஆற்காடு-28, அம்மூர்-22, காவேரிப்பாக்கம்-7