ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருக்கு வரவேற்பு


ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருக்கு வரவேற்பு
x

வாலாஜாவில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக எஸ்.எம்.சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து அவர் மாவட்டத்திற்கு உட்பட்ட நகர, ஒன்றிய, பேரூராட்சிகளில் உள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை நேரில் சந்தித்து வருகிறார்.

வாலாஜாவிற்கு வருகை தந்த அவருக்கு நகர அ.தி.மு.க. செயலாளர் டபிள்யு.ஜி.மோகன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை, டபிள்யு.எஸ்.வேதகிரி, ஒன்றிய செயலாளர் வி.கே.ராதாகிருஷ்ணன், அம்பேத்ராஜன், மூர்த்தி, மணி, ஆறுமுகம், நாராயணன், டபிள்யு.ஜி.முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன், மாவட்ட செயலாளருக்கு மலர் கிரிடம் அணிவிக்கப்பட்டது.

தொடர்ந்து வாலாஜா நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை மற்றும் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் மாலை அணிவித்தார். பின்னர் பஸ் நிலையத்தில் இருந்து கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., பெரியார், அண்ணா சிலைகளுக்கும், ஜெயலலிதா உருவப்படத்திற்கும் மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் அம்மூர் பேரூர் செயலாளர் தினகரன், செல்வம், சிவசிதம்பரம், ஜீவா, பத்மநாபன், விநாயகம், மகேந்திரன், திலிப் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story