ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம்
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் ராணிப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் கே.எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் எம்.கே.செல்வம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் எம்.கே.முரளி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ஆ.இளங்கோ, இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் பகவான் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழ்நாட்டில் இந்தி, ஆங்கிலம், தமிழ் என மூன்றாவது இடத்திற்கு அனைத்து துறைகளிலும் தமிழ் தள்ளப்பட்டு இருக்கிறது. தமிழை மீண்டும் அனைத்து துறைகளிலும் முதலிடம் பெறுவதற்காக தமிழைத் தேடி மதுரை பரப்புரை பயணம் வருகிற 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை டாக்டர் ராமதாஸ் மேற்கொள்ள உள்ளார். அதில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டத்தில் இருந்து பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்கிறார்கள். கடந்த 14-ந் தேதி கஞ்சா போதையில் சோளிங்கரில் மாணவன் ஒருவர் பஸ் டிரைவரை ரத்தம் வரும்படி தாக்கியுள்ளார். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. மாவட்ட நிர்வாகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் இருசக்கர வாகனங்கள் திருட்டு அடிக்கடி நடக்கிறது, காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.