16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை- ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை- ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

ஈரோடு

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

பாலியல் பலாத்காரம்

கோபி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 41). கூலி தொழிலாளி. இவருடைய வீட்டின் அருகே உள்ள 16 வயது சிறுமி டி.வி. பார்ப்பதற்காக அடிக்கடி கருப்புசாமி வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ந்தேதி டி.வி. பார்ப்பதற்காக கருப்புசாமி வீட்டுக்கு சிறுமி சென்றார்.

வீட்டில் கருப்புசாமியும், அவருடைய மனைவியும் இருந்தனர். சிறிது நேரத்தில் கருப்புசாமியின் மனைவி தான் கழிவறைக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்றுவிட்டார். அப்போது கருப்புசாமி சிறுமியை கட்டாயப்படுத்தி அருகில் இருந்த அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பிறகு சில நாட்கள் கழித்து கருப்புசாமி, சிறுமியை மிரட்டி மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

20 ஆண்டு சிறை

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து கோபி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கருப்புசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நேற்று கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட கருப்புசாமிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மாலதி தீர்ப்பு கூறினார். மேலும் அவர், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.


Next Story