பொள்ளாச்சி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: தாத்தா உள்பட 3 பேர் கைது- காதலனுக்கு போலீஸ் வலைவீச்சு


பொள்ளாச்சி அருகே  சிறுமி பாலியல் பலாத்காரம்: தாத்தா உள்பட 3 பேர் கைது- காதலனுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தாத்தா உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தாத்தா உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

16 வயது சிறுமி கர்ப்பம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரை கடந்த சில நாட்களுக்கு முன் காணவில்லை என்று தாலுகா போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் காணவில்லை என்று வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் சிறுமி வீட்டிற்கு திரும்பி வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான விக்னேஷ் (20) என்பவருக்கும், அந்த சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறி, அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானதாக தெரிகிறது. இதுகுறித்து விக்னேஷ் சிறுமிக்கு உறவு முறையில் தாத்தா வரும் சின்னசாமி (55) என்பவரிடம் கூறினார். இதையடுத்து சிறுமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில், அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பின்னர் சிறுமிக்கு மாத்திரையை கொடுத்து அவர்கள் கர்ப்பத்தை கலைத்ததாக கூறப்படுகிறது.

போக்சோவில் கைது

இதற்கிடையில் திருநீரு வைக்க அந்த பகுதியை சேர்ந்த அர்ஜூனன் (60) என்பவரிடம் சிறுமியை சின்னசாமி அழைத்து சென்றார். அங்கு வைத்து சின்னசாமி சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.இதற்கு அர்ஜூனன் உடந்தையாக இருந்து உள்ளார். இதனால் விரக்தி அடைந்த சிறுமி, காதலனிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்து கொள்ள பழனிக்கு சென்று, அங்கு ஈஸ்வரன் என்பவரது வீட்டில் தங்கியதும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் காதலன் விக்னேஷ், சின்னசாமி, அர்ஜூனன் ஆகியோர் மீது போக்சோ வழக்குபதிவு செய்தனர். மேலும் சிறுமி என்று தெரிந்தும் அடைக்கலம் கொடுத்ததாக ஈஸ்வரன் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதில் சின்னசாமி, அர்ஜூனன், ஈஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விக்னேசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமியை கோவையில் உள்ள காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story