சிறுமிகள் பாலியல் பலாத்காரம்; 2 பேர் கைது


சிறுமிகள் பாலியல் பலாத்காரம்; 2 பேர் கைது
x

வெவ்வேறு சம்பவங்களில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

மதுரை மேலபனங்காடி குலமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது 19).இவர் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அந்த சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தல்லாகுளம் அனைத்து மகளிர் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.

மற்றொரு சம்பவத்தில் 18 வயதான வாலிபர் ஒருவர், 16 வயதுடைய சிறுமியை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தார். பின்னர் அவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தைகள் நலப் பிரிவு அலுவலர் மதுரை தெற்கு மகளிர் போலீசில் அளித்தார். அதன்படி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story