இளம்பெண் பாலியல் பலாத்காரம்
சூரமங்கலம்:-
சேலத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பலாத்காரம்
சேலம் கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). கூலி தொழிலாளியான இவர், மனநலம் பாதிக்கப்பட்ட 31 வயது பெண் ஒருவரிடம் நைசாக பேச்சு கொடுத்து அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அந்த வழியாக வந்த அந்த பெண்ணின் உறவினர் ஒருவர், இதை பார்த்து கூச்சலிட்டதால் மணிகண்டன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பின்னர் அந்த பெண்ணை மீட்டு உறவினர் வீட்டுக்கு அழைத்து வந்தார்.
கைது
இதனை அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். நடந்த விவரங்களை சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ததாக மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.