பொள்ளாச்சி பகுதிகளில் வேகமாக பரவுகிறது: அம்மை நோய் தாக்கி 8 மாடுகள் சாவு-இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்


பொள்ளாச்சி பகுதிகளில் வேகமாக பரவுகிறது: அம்மை நோய் தாக்கி 8 மாடுகள் சாவு-இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 Dec 2022 12:30 AM IST (Updated: 31 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பகுதிகளில் அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை நோய் தாக்கி 8 மாடுகள் இறந்துள்ளதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதிகளில் அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை நோய் தாக்கி 8 மாடுகள் இறந்துள்ளதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மாடு சாவு

பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக கால்நடை வளர்ப்பு தொழில் உள்ளது. இந்த தொழிலை நம்பி ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அம்மை நோய் தாக்குதலால் மாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பொள்ளாச்சி அருகே தேவம்பாடிவலசு கிராமத்தில் பாக்கிலட்சுமி என்பவரின் 7 மாத சினை மாடு நேற்று அம்மைநோயால் பாதிக்கப்பட்டு இறந்தது.

இதையடுத்து கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதை தொடர்ந்து அங்கு சிறப்பு முகாம் நடைபெற்றது.

இழப்பீடு

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- பொள்ளாச்சி பகுதிகளில் மாடுகளுக்கு அம்மை நோய் தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய பகுதிகளில் மட்டும் இதுவரைக்கும் 8 மாடுகள் வரை உயிரிழந்து உள்ளன. இந்த நோயில் பாதிக்கப்படும் மாடுகளின் கால்களில் வீக்கம், உடலில் கொப்பளங்கள் வருகிறது. மேலும் தீவனம் சாப்பிட முடியாத நிலை ஏற்படுகிறது. கால் மூட்டிகளில் வலி ஏற்படுவதால் மாடுகளால் படுக்க முடியவில்லை. தீவனம் சாப்பிடாததால் பால் உற்பத்தியும் குறைந்து விடுகிறது. மேலும் சினை மாடுகளில் கருக்கலைந்து விடுகிறது. அம்மை நோயை கட்டுப்படுத்த மருந்துகளும் இல்லை. எனவே அதிகாரிகள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்த மாடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story