வரதராஜ பெருமாள் கோவிலில் ராப்பத்து உற்சவம்


வரதராஜ பெருமாள் கோவிலில் ராப்பத்து உற்சவம்
x
தினத்தந்தி 15 Jan 2023 12:15 AM IST (Updated: 15 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் வரதராஜ பெருமாள் கோவிலில் ராப்பத்து உற்சவம் நடந்தது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் சாத்துக்கூடல் சாலை ஸ்ரீ பெருந்தேவி தாயார் உடனுறை வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து உற்சவம் நிறைவடைந்து, ராப்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஆண்டாளுக்கு கூடாரவல்லி உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு ஸ்ரீ பெருந்தேவி தயாருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருந்தேவி தாயாருக்கு ஆண்டாள் கோஷ்டியுடன் சாற்று முறை நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு திருப்பாவை பாடல்கள் பாடினார்கள். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story