ராசிபுரத்தில் காவலன் செயலி குறித்த விளக்க கூட்டம்


ராசிபுரத்தில்   காவலன் செயலி குறித்த விளக்க கூட்டம்
x

ராசிபுரத்தில் காவலன் செயலி குறித்த விளக்க கூட்டம்

நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரத்தில் பெண்களின் பாதுகாப்புக்கான காவலன் செயலி குறித்த விளக்க கூட்டம் நடந்தது. ராசிபுரம் நகராட்சி 12-வது வார்டு கவுன்சிலர் சசிரேகா சதீஷ் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் தங்கம், கவுன்சிலர் ஸ்ரீ வித்யா பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களையும், தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி மற்றும் சேலைகளை வழங்கினார். பின்னர் இன்ஸ்பெக்டர் சுகவனம் பேசுகையில், காவலன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதில் பெறப்படும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் இதர பிரச்சினைகள் குறித்த புகார்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். மேலும் அவர்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ள அறிவுரை கூற வேண்டும். அதன் மூலம் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படுவதோடு, அவர்கள் சிறந்தவர்களாக விளங்குவார்கள். மேலும் பாதுகாப்புக்காக வீடுகள் மற்றும் கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார். முடிவில் தொழில் அதிபர் சதீஷ் நன்றி கூறினார்.


Next Story