ராசிபுரம் நகர்மன்ற கூட்டம்


ராசிபுரம் நகர்மன்ற கூட்டம்
x
நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் நகர மன்ற கூட்டம் கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் ராசிபுரம் நகராட்சி பகுதியில் ரூ.2 கோடியே 71 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பீட்டில் எல்.இ.டி. தெருவிளக்குகள் அமைக்கவும், நகராட்சி பகுதியில் உள்ள 7 பள்ளிகளில் காலை உணவு திட்டத்திற்காக ரூ.20 லட்சம் ஒதுக்குவது உள்பட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகராட்சி உதவி பொறியாளர் கார்த்திக், மேலாளர் வசந்தா, நகர வருவாய் ஆய்வாளர் மாணிக்கம், நகர அமைப்பு ஆய்வாளர் முருகேசன் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story