எலிமருந்து விற்பனை செய்த கடைக்கு சீல் வைப்பு


எலிமருந்து விற்பனை செய்த கடைக்கு சீல் வைப்பு
x

எலிமருந்து விற்பனை செய்த கடைக்கு சீல் வைப்பு

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

எலிமருந்து விற்பனை செய்த கடைக்கு சீல் வைப்பு

எலி பேஸ்ட்

விவசாய பயிர்கள் மற்றும் வீடுகளில் உணவு பொருட்களை பாழாக்கும் எலிகளை, கட்டுப்படுத்த எலி மருந்து, எலி பேஸ்ட் பயன்படுத்தப்பட்டு வந்தது.ஆனால் இந்த எலி மருந்தை சிலர் தற்கொலைக்கான ஆயுதமாக பயன்படுத்த தொடங்கினர். எனவே எலி மருந்தை கடைகளில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.இந்த நிலையில் தஞ்சையில் தடையை மீறி கடைகளில் எலி பேஸ்ட், மருந்து விற்பனை செய்யப்படுகிறதா ? என சோதனை செய்ய மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவிட்டார்.

சீல் வைப்பு

இதன்படி நேற்று தஞ்சையில் உள்ள கடைகளில் மகர்நோம்புச்சாவடி துப்புரவு ஆய்வாளர் செல்வமணி, கல்லுக்குளம் துப்புரவு ஆய்வாளர் ஜோசப்சேவியர், இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மகர்நோம்புச்சாவடி, வாடிவாசல் பஜார் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடந்தது. அப்போது ஒரு நாட்டு மருந்து கடையில் தடை செய்யப்பட்ட எலி பேஸ்ட் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்்து அந்த கடையில் இருந்து 25-க்கும் மேற்பட்ட எலி பேஸ்ட், மருந்துகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.


Next Story