திருப்போரூர் முருகன் கோவிலில் தேரோட்டம்


திருப்போரூர் முருகன் கோவிலில் தேரோட்டம்
x

திருப்போரூர் முருகன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

செங்கல்பட்டு

பிரம்மோற்சவ விழா

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கணபதி ஹோமம், ஆறாம் கால பூஜை, அபிஷேக ஆராதனை போன்றவை நடைபெற்றது.

கிளி வாகனம், பூத வாகனம், வெள்ளி அன்ன வாகனம், வெள்ளி மயில் வாகனம், தங்கமயில் வாகனம், பஞ்சமூர்த்தி புறப்பாடு, யானை வாகனம் போன்றவற்றில் எழுந்தருளி முருகபெருமான் நான்கு மாடவீதிகளில் வீதி உலா வந்தார்.

தேரோட்டம்

மாசி மாத பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை 10.30 மணியளவில் தொடங்கியது. நேற்று காலை முருகபெருமானுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் முருகபெருமான் வள்ளி தெய்வானையுடன் நான்கு மாடவீதிகள் வழியாக ஊர்வலமாக தேரில் பவனி வந்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 6-ந் தேதி (திங்கட்கிழமை) தீர்த்தவாரியும், தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது. 9-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

போலீஸ் பாதுகாப்பு

விழா ஏற்பாடுகளை செங்கல்பட்டு தக்கார்/ உதவிஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், கோவில் செயல் அலுவலர் வெங்கடேசன், கோவில், மேலாளர் வெற்றிவேல் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் தலைமையில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீசன் மற்றும் திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஏற்பாட்டில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story