ரேஷன் கடையில் 5 கிலோ கியாஸ் சிலிண்டர் விற்பனை


ரேஷன் கடையில் 5 கிலோ கியாஸ் சிலிண்டர் விற்பனை
x

வெள்ளகோவில் ரேஷன் கடையில் 5 கிலோ கியாஸ் சிலிண்டர் விற்பனையை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் தொடங்கி ைவத்தனர்.

திருப்பூர்


வெள்ளகோவில் ரேஷன் கடையில் 5 கிலோ கியாஸ் சிலிண்டர் விற்பனையை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் தொடங்கி ைவத்தனர்.

மருத்துவ முகாம்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஒன்றியம், புதுப்பை ஊராட்சி, கணேசன் புதூரில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாமை திருப்பூர் கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் முன்னிலையில் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து சிறந்த கால்நடைகளுக்கான பாராட்டு சான்றிதழ்களையும், கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களையும் வழங்கினர்.

கியாஸ் சிலிண்டர்

வெள்ளகோவில் சிவநாதபுரத்தில் உள்ள ரேஷன் கடையில், கலெக்டர் வினீத் தலைமையில், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் முன்னிலையில் அமைச்சர்மு.பெ.சாமிநாதன் சிலிண்டர் விற்பனையை தொடங்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

5 கிலோ, 2 கிலோ எடை கொண்ட அனல் மற்றும் தனல் என்ற பெயர் கொண்ட கியாஸ் சிலிண்டர் விற்பனையை கூட்டுறவுத்துறை அமைச்சர் கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி, சென்னையில் தொடங்கி வைத்தார்.அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கியாஸ் சிலிண்டர்கள்

நியாய விலைக் கடைகளில் 5 கிலோ எடையுள்ளஎல்.பி.ஜி. சிலிண்டர்கள் விற்பனை, சிறு வணிகர்கள், தெருவோர வியாபாரிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் பின்னலாடை மற்றும் எண்ணெய் ஆலைகளில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்பட பலருக்கு இந்த சிலிண்டர் பயனுள்ளதாக இருக்கும்.

நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்படும் எல்.பி.ஜி. சிலிண்டர்களை பொறுத்தவரை முகவரிக்கான ஆதாரம் தேவையில்லை அடையாளச் சான்று மட்டுமே போதுமானது, இதன் பெயர் தனல் 2 கிலோ மற்றும் அனல் 5 கிலோ என அழைக்கப்படும். பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மருந்து பெட்டகம்

அதைத்தொடர்ந்து வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்ட உப்புபாளையம் குளத்தில் நீர் நிரம்பியுள்ளதை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பார்வையிட்டார். வெள்ளகோவில் ஒன்றியம், வீரசோழபுரத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் தொடங்கி வைத்து நோயாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் கே.ஆர்.முத்துகுமார், வெள்ளகோவில் நகர்மன்ற தலைவர் மு.கனியரசி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன், துணைப்பதிவாளர் பழனிச்சாமி, தி.மு.க.ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், வீரசோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி, தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ஆதவன் ஜெகதீஷ் உள்பட உள்ளாட்சிப்பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள், மருத்துவத்துறையினர் கூட்டுறவு சங்கத்தினர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story