செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன் கார்டு தொடர்பான குறைதீர்க்கும் முகாம்


செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன் கார்டு தொடர்பான குறைதீர்க்கும் முகாம்
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன் கார்டு தொடர்பான குறைதீர்க்கும் முகாம் 8-ந்தேதி நடக்கிறது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது வினியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை அன்று மாவட்டம் முழுவதும் வட்டங்கள் வாரியாக குடும்ப அட்டை தொடர்பாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த முகாம் செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள செட்டி புண்ணியம், செய்யூர் வட்டத்தில் உள்ள பாளையம், மதுராந்தகம் வட்டத்தில் உள்ள கீழ் வலம், திருக்கழுக்குன்றம் வட்டத்தில் உள்ள சதுரங்கப்பட்டிணம், திருப்போரூர் வட்டத்தில் உள்ள கொட்டமேடு, மற்றும் வண்டலூர் வட்டத்தில் உள்ள பொன்மார் ஆகிய கிராமங்களில் வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்த குறைதீர் முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைப்பேசி எண் பதிவு, கைபேசி எண் மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை பெற்று பொதுமக்கள் பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story