ரேஷன் கடைகளில் பொருட்கள் பற்றாக்குறை என புகார் வந்தால் அலுவலர்கள் மீது நடவடிக்கை கலெக்டர் மோகன் எச்சரிக்கை


ரேஷன் கடைகளில்  பொருட்கள் பற்றாக்குறை என புகார் வந்தால் அலுவலர்கள் மீது நடவடிக்கை  கலெக்டர் மோகன் எச்சரிக்கை
x

ரேஷன் கடைகளில் பொருட்கள் பற்றாக்குறை என புகார் வந்தால் அலுவலர்கள் மீது நடவடிக்கை கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் சாலாமேடு சீனிவாசா நகரில் உள்ள ரேஷன் கடையில் பாமாயில் சரியாக கிடைக்கப்பெறவில்லை என பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்ததன் அடிப்படையில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் மோகன், அக்கடைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் அத்தியாவசிய பொருட்கள் சரியாகவும், உரிய நேரத்திலும் வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.

அதன் பின்னர் உணவு வினியோகப்பிரிவு துணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு கலெக்டர் மோகன் சென்று ரேஷன் கடைகளுக்கு மாதந்தோறும் உணவுப்பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா என பதிவேடுகளை பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், ஒவ்வொரு மாதமும் பொதுமக்களுக்கு ரேஷன் கடை மூலம் உணவுப்பொருட்கள் தடையின்றி முழுமையாக வழங்குவதை கூட்டுறவுத்துறை, மாவட்ட வழங்கல் துறை உறுதி செய்வதுடன், மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழகத்துறை, பொருட்களை ரேஷன் கடைக்கு வழங்குவதை சரியான காலங்களில் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டிய பொருட்கள் பற்றாக்குறை ஏற்படுவது கண்டறிந்தால் முன்கூட்டியே தேவையான அளவை பதிவுசெய்து பொருட்களை பெற்று இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மீண்டும் பொதுமக்கள், ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்கள் பற்றாக்குறை என புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த ஆய்வின்போது மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாலமுருகன், நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் பாலமுருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story