கிருஷ்ணகிரியில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கிருஷ்ணகிரியில்  3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

கிருஷ்ணகிரியில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் மற்றும் போலீசார் வேப்பனப்பள்ளி-நாச்சிக்குப்பம் கூட்டு ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டதில், 60 மூட்டைகளில் 3,000 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. இதையடுத்து வேனை ஓட்டி வந்த பெத்ததாளப்பள்ளியை சேர்ந்த கணேசன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியுடன் வேனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக குறிஞ்சிப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார், செல்வம், மாரிமுத்து ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story